search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:-

    உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    நாளை தமிழக கடலோர மாவட்டம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 29, 30-ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 31-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    இதையும் படியுங்கள்... ட்விட்டர் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது- சி.இ.ஓ-க்கு ராகுல் காந்தி கடிதம்

    Next Story
    ×