search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருக்குறளை தேசிய நூலாகவும், தமிழை ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

    திருக்குறளை தேசிய நூலாகவும், தமிழை ஆட்சி மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம்
    கரூர் :

    கரூர் திருக்குறள் பேரவை 36&ம் ஆண்டு விழா தலைவர் தங்கராசு தலைமையில் கரூரில் அண்மையில் நடைபெற் றது. திருவள்ளுவர் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து போற்றி கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. குளித்தலை தமிழ்ப் பேரவைத்தலைவர் கடவூர் மணிமாறன், நாகை சிவம் ஆகி யோர் சிறு நூல்களை அறிமுகம் செய்து பேசினர். கட்டு ரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பேரவை அறிவுக்கண்ணன் பரிசு வழங்கினார்.

    கருவூர்  கன்னல்  எழுதிய இப்படியும் சிலர்  நூலுக்கு முதல் பரிசு ரூ.5,000, திருமலையில் நீர் நேற்று, இன்று, நாளை கட்டுரைக்கு 2&ம் பரிசு ரூ.3,000, வெற்றி பேரொளியின் அரியணை கவிதை, நந்தவனம் சந்திரசேகரின் இன்னொரு  முறை முயற்சி செய்யுங்கள் நூல் ஆகிய இரு நூல்களுக்கு  3&ம்  பரிசாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டது. புலவர்   எழில்வாணனின் யாப்பு  விளக்கம்  நூலுக்கு சிறப்பு பரிசு ரூ.3,000 வழங்கப்பட்டது.

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். தமிழை ஆட்சி மொழியாகவும், நீதி  மொழியாகவும்,  வழி பாட்டு மொழியாகவும் அறிவிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
    Next Story
    ×