search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முசிறி டி.எஸ்.பி. அருள்மணி சி.சி.டி.வி. கேமரா செயல்பாட்டினை தொடங்கிவைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்.
    X
    முசிறி டி.எஸ்.பி. அருள்மணி சி.சி.டி.வி. கேமரா செயல்பாட்டினை தொடங்கிவைத்து பார்வையிட்டபோது எடுத்தபடம்.

    கிராமத்திற்கு சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்த ஊராட்சி மன்ற தலைவர்

    திருச்சி அருகே ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் சொந்த செலவில் கிராமத்தின் பல்வேறு இடங்களில் ஊராட்சி மன்ற தலைவர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கிராமப்புறங்களில் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்கும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காகவும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

    இந்த வேண்டுகோளை ஏற்ற துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங் கபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மகேஸ்வரன் தனது சொந்த செலவில் ரூபாய் ஓரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 12 கேமராக்களை வாங்கினார்.

    இதையடுத்து அந்த கேமராக்கள் பஸ் நிறுத்தம், விநாயகர் கோவில், அய்யப்பன் கோவில் மற்றும் ஊரின் முக்கிய இடங்களில் பொருத்தியுள்ளார்.  

    இதன் தொடக்க நிகழ்ச்சியில் முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி கலந்து கொண்டு சி.சி.டி.வி. கேமரா செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். 

    அப்போது அவர் பேசியதாவது:&

    நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை எளிதாக்கும் வகையில்  தற்சமயம்  சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. 

    அதனால் நரசிங்கபுரம் ஊராட்சியில் நிறுவப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை  போன்று துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மற்ற கிராம ஊராட்சிகளிலும் பொருத்த கிராம ஊராட்சி நிர்வாகம், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், வசதி படைத்தோர், இளைஞர்கள் ஆகியோர் கூட்டு முயற்சி எடுத்து ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    நரசிங்கபுரம் ஊராட்சியில் நிறுவப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் உள்ள திரையின் வழியே காண்பதற்கும், காட்சிகளை பதிவு செய்வதற்கும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிகழ்ச்சியில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×