search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
    X
    அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    சாத்தான்குளம் பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

    சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் கொரானா தொற்று பரவும் வகையில் பலர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை தலைமையில், சுகாதாரத்துறை குழுவினர் சாத்தான்குளம் பஜார் பகுதி, தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பஜார் பகுதியில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கடைகளில் சோதனை நடத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீறி யாரேனும் விற்பனை செய்கிறார்களா என்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    மேலும் தொழிற்சாலைகள், பள்ளிகளில் தனிமனித இடைவெளி கடை பிடிக்கப்படுகிறதா என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து இதுபோன்ற அதிரடி ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×