
திருச்செந்தூர் அமலிநகர் மற்றும் ஜீவாநகர் ஆகிய இரு இடங்களில் உள்ள கடற்கரையில், கடல் அரிப்பைத் தடுத்திடும் வகையில் தனித்தனியாக சுமார் 1.5 கி.மீ. தொலைவில் தலா சுமார் ரூ. 62 கோடி செலவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கபடவுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலி நகர் கடற்கரையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மீன் வளத்துறை தலைமைப்பொறியாளர் ராஜூ, தூத்துக்குடி மண்டல பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற் பொறியாளர்கள் ரவி, தயாநிதி ஆகியோரிடம் தூண்டில் வளைவு பாலம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.