
உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின் ரோட்டில் கரையில் நின்ற ஒரு மரம் வளைந்து மெயின்ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.
வாகனங்களில் செல்லும்போதும், லோடுவாகனத்திலும் இந்தமரம் இடிக்கிறது. அதனால் இந்த மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் இந்த மரம் முழுமையாக அகற்றப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.