search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெண் குழந்தைகள் குடும்பத்தின் அச்சாணியாக உள்ளனர் - அதிகாரி பேச்சு

    சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை - சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் செயல்படும் விழுதுகள் குழந்தைகள் வள மையத்தில் விழுதுகள் அமைப்பு சார்பாக தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் பேசுகையில், ‘பெண் குழந்தைகள் குடும்பத்தின் அச்சாணியாக உள்ளனர்.

    ஒரு குடும்பத்தின் மொத்த வளர்ச்சி கலவையும் பெண் குழந்தையை அடிப்படையாக கொண்டு தான் அமைந்துள்ளது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டத்தக்கது. இருப்பினும் இன்றும் பெண் குழந்தைகள் மீதான அடக்குமுறை சில இடங்களில் நடைபெறுகிறது. 

    சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை - சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது என்றார்.

    திருப்பூர் மாவட்ட சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை பேசுகையில்:

    பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியன இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கம்.

    தற்போதைய சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். 

    இதுவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துதல் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புதல் ஆகியன மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.
    Next Story
    ×