search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக கவசம்
    X
    முக கவசம்

    முகக்கவசம் அணியும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன?

    முகக்கவசத்தை கழற்றும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் முகக்கவசத்தின் கயிற்றை பிடித்து அதனை அகற்ற வேண்டும்.


    முகக்கவசத்தை முறையாக அணிந்தால் மட்டுமே கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்கும் கவசமாக அது இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் நாம் அணிந்து இருக்கும் முகக்கவசம் தொளதொளவென இருக்க கூடாது. பலர் முகக்கவசத்தை மூக்கு தெரியும்படி வாயை மட்டும் மறைத்த நிலையில் அணிந்திருப்பார்கள். அதனால் எந்த பயனும் இல்லை. ஒரு சிலர் முகக்கவசத்தை காதில் தொங்கவிட்டு தாடையை மூடியபடி அணிந்திருப்பார்கள்.

    இன்னும் சிலர் தொளதொளவென பெயர் அளவுக்கு மட்டுமே முகக்கவசம் அணிந்திருப்பார்கள். இதுவும் தவறானது ஆகும். இதுபோன்ற முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    முகக்கவசத்தை கழற்றும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் முகக்கவசத்தின் கயிற்றை பிடித்து அதனை அகற்ற வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசமாக இருந்தால் அதனை பொதுவெளியில் வீசாமல் பாதுகாப்பான முறையில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×