search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: ரூ.5-க்கு தயங்கினால் 500 ரூபாய் அபராதம் நிச்சயம்

    முகக்கவசம் அணியாதவர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    சென்னை:

    கொரோனா பரவல் ஒமைக்ரான் ரூபத்தில் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளன.

    முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராத தொகையை ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

    இதையடுத்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

    சென்னை மாநகர காவல் துறையினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை தொடங்கி விட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை மேற் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

     

    கொரோனா  வைரஸ்

    பொது இடங்களில் வெளியில் செல்லும்போது பலர் முகக்கவசங்களை சரியாக அணிவது இல்லை. காதில் தொங்க விட்டபடி செல்கிறார்கள். சாலைகளில் போலீசாரை பார்த்ததும் ஹெல்மெட்டை அணிவது போல பல இடங்களில் பொதுமக்கள் முக கவசத்தை அணிகிறார்கள்.

    இதுபோன்று திடீரென போலீசை பார்த்ததும் முக கவசம் அணிபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் கொரோனா பரவல் முடிவுக்கு வரும்வரை முகக்கவசம் அணிவதை மறக்காமல் வழக்கமாகி கொள்ள வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    முகக்கவசத்தை சரியாக அணியாமல் தாடையில் தொங்க விட்டபடி சென் றாலும் சட்டை பையில் வைத்துக் கொண்டு அதிகாரி களை பார்த்ததும் அணிந் தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்று சிக்கினால் ரூ.500 அபராதம் நிச்சயம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.

    ஒரு முகக்கவசத்தின் விலை ரூ.5 ஆகும். அதை வாங்கி அணியாமல் அலட்சியமாக சுற்றினால் அதை விட நூறு மடங்கு அதிகமாக ரூ.500 அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் இந்த அபராத நடவடிக்கையை தவிர்க்கும் வகையிலும் கொரோனா பரவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை மாநகர காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்களிடம் தினமும் அபராதம் வசூலித்து வருகிறார்கள். சராசரியாக 6 ஆயிரம் பேர் வரையில் தினமும் முகக்கவசம் அணியாமல் பிடிபடுகிறார்கள்.

    அவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 19-ந்தேதி அன்று 5,736 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

    20-ந்தேதி அன்று 5,318 பேரிடம் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 600-ம், 21-ந்தேதி அன்று 4,858 பேரிடம் ரூ. 9 லட்சத்து 71 ஆயிரத்து 600-ம், 22-ந்தேதி 4,082 பேரிடம் ரூ. 8 லட்சத்து 16 ஆயிரத்து 400-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இப்படி சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த நடவடிக்கை கொரோனா பரவல் முடியும் வரை தீவிரப்படுத்தப்படும் எனவும் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்து உள்ளனர்.

    இதையும் படியுங்கள்... இந்திய வாக்காளர்கள் - உலகின் 8வது அதிசயம்!

    Next Story
    ×