
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள், டாக்டர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இரவு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.