search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    X
    பாளை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் குடியரசு தினவிழா பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடியரசு தினவிழாவுக்காக 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குடியரசு தின விழாவுக்காக கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தின விழாவுக்காக கலெக்டர்கள் கொடியேற்றும் பகுதிகளில் குறைந்த அளவு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.அவர்களும் அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழா நடைபெறும் நெல்லை ஆயுதப்படை மைதானம், தூத்துக்குடி தருவை மைதானம், தென்காசி பள்ளி மைதானம் ஆகியவை இன்று முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அங்கு தொடர்ந்து 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழலும் காமிரா, சி.சி.டி.வி. காமிராக்களை அந்த பகுதியில் பொருத்தப்பட்டு வருகிறது.

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்.

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசாரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 போலீசார், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாநகர பகுதியில் 500 போலீசாரும் என மொத்தம் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    அனைத்து ரெயில் நிலையங்கள், அனைத்து பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். 

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்கள், பெரிய தொழிற் சாலைகள், அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றிலும் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி மையம் ஆகியவற்றிலும் வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்த காட்சி.

    ரெயில் நிலையங்கள், ரெயில்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×