search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா
    X
    கொரோனா

    சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
    ராமநாதபுரம்

    கொரோனாவை வீழ்த்த பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

    ஆனால் சுய கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடை பிடிக்காமல்  சாலைகளில் சுற்றித் திரிந்தனர். இதன் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது கொரோனாவை துரத்தும் அரசின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    காய்கறிகள், மளிகை பொருட்கள், பஜார் போன்ற இடங்களில் சமூக இடை வெளியை பொதுமக்கள் கடை பிடிப்பதில்லை. பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் தெரிவித்தும் அதை அவர்கள் கண்டு கொள்ளாத நிலை தொடருகிறது. 

    தினந்தோறும் ஒலி பெருக்கி வாயிலாக மக்களுக்கு போலீசார் மற்றும் நகராட்சி சுகாதார துறையினர் சமூக இடைவெளி குறித்தும் முக கவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனால் அதை பொதுமக்கள் காதில் வாங்குவதே இல்லை.

    கொரோனா பயமின்றி மக்கள் நடமாடுவதை ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில்  காணமுடிந்தது.

    இதே நிலைதான் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்பகுதிகளிலும் உள்ளது. கிராமப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில் தற்போது அதிகமான எண்ணிக் கையில் கிராம மக்கள் கொரோனாவால் பாதிக் கப்பட்டு  வருகின்றனர்.

    கொரனாவின் வீரியம் தெரியாமல் உள்ளவர்கள் இனிமேலாவது தேவையின்றி  வெளியே வரு வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அரசின் விதிமுறைகளை கடை பிடித்து செல்ல வேண்டும்.

    பல்வேறு நடவடிக் கைகளை போலீஸ் தரப்பில் எடுத்தாலும் அதை அலட்சியமாக கருதி கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக் காமல் இருந்து வருவது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படுகிறது. 

    சமூக இடைவெளி என்றால் என்ன என்று கேட்கும் அளவில்  ராமநாத புரம் மாவட்ட மக்கள் உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலும் அதை பொதுமக்கள் கண்டு கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது. 

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதை உணர்ந்து பொதுமக்கள் அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    Next Story
    ×