search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை
    X
    ஆனைமலை

    ஆனைமலை, காரமடையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

    ஆனைமலை, காரமடையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    ஆனைமலை தாலுகாவில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இங்கு கோவை, திருப்பூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    தற்போது ஆனைமலை பகுதியில் நாளொனறுக்கு 50 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனைமலை பகுதியில் நோய் தொற்று ஏற்பட்ட வீடுகளில் கிருமி நாசினி தெளித்து நோய் பரவலை தடுக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் ஆனைமலை பகுதி பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில், 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு, கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. சிறப்பு முகாம் களிலும், பரிசோதனைகள் நடைபெறுகின்றன. 

    கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த 22-&ந் தேதி, 160 பேர், 23&ந் தேதி, 174 பேர் என 2 நாட்களில், 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. 

    தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களிலும் தினமும் தடுப்பூசி போடும் பணியும் நடக்கிறது. மேலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×