search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் சமீரன்
    X
    கலெக்டர் சமீரன்

    கோவையில் ஊரடங்கு மீறல் - ரூ.5 லட்சம் அபராதம்

    முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை ரூ.200&ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 600 படுக்கைகளும், இ.எஸ்.ஜ. ஆஸ்பத்திரியில்  800 படுக்கைகளும், லேசான அறிகுறி களுடன் தொற்று உதவி செய்யப் படு பவர்களுக்கு கொடிசியா வளாகத்தில் 600 படுக்கைகளும் உள்ளன. 

    இதுதவிர பாரதியார் பல்கலைக் கழகத்தில் சித்தா முறையில் சிகிச்சை அளிக்க 250 படுக்கைகள் என மொத்தம் 2,250 படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    தற்போது கூடுதலாக தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சித்தா முறையில் சிகிச்சை அளிப்பதற்காக 120 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படுக்கைகளை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

    கோவையில் தற்போது 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். நேற்று முழு உரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் ரூ. 5 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொழிலகங்களில் முகக் கவசம் இல்லாத பணியாளர்கள் வரக்கூடாது என்று அறிவித்து உள்ளோம். விதிகளை மீறும் தொழிலகங்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கும் கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் கோவையில் எளிமையாக குடியரசு தினம் கொண்டாடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×