search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ரெயில்வே என்.டி.பி.சி. தேர்வில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 446 பேர் தேர்ச்சி- ரெயில்வே தேர்வாணையம் தகவல்

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    சேலம்:

    இந்திய ரெயில்வேயில் என்.டி.பி.சி. எனப்படும் தொழிற் நுட்பம் சாராத 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டம் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு, முதற்கட்ட கணினி வழி தேர்வு (சி.பி.டி-1) 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவு இந்த மாதம் 15-ந்தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என ஏற்கனவே இந்திய அரசு ரெயில்வே தேர்வாணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 15-ந்தேதி தேர்வு முடிவுகள் ரெயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டது. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் எண் வரிசை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் தமிழகத்தை சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். முதற்கட்ட தேர்வு எழுதியவர்கள் தாங்கள் எடுத்த மதிப்பெண், விடைத்தாள், தேர்வு வாரியம் வழங்கிய விடை, மதிப்பெண் பட்டியல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

    இந்த தேர்வில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது குறித்த விபரத்தை தற்போது ரெயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Next Story
    ×