search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க. ஸ்டாலின்
    X
    மு.க. ஸ்டாலின்

    ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’க்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்: திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

    ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என மு.க. ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார்.
    தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் இல்ல திருமண விழா தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

    திருமணத்தை நடத்தி வைத்து பேசிய மு.க. ஸ்டாலின்;,

    ‘‘சீர்திருத்த திருமணத்தை அங்கீகாரம் ஆக்கியது அண்ணா தலைமையிலான தி.மு.க. கொரோனா கட்டுபாட்டு வழிகாட்டு நெறிமுறைகளுடன் திருமணம் நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் இருக்கும் முருகன் புதிய பொறுப்பிற்கு வந்துள்ளார்.

    ‘நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காகத்தான் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். பணியாற்றி கொண்டிருக்கிறோம். நீங்களும் அந்த வகையில்தான் ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக, தன்மானத்துடன் நடைபெறும் திருமணமாக, இந்த திருமணம் நடந்து இருக்கிறது. பூச்சி முருகனை சிலர் பூச்சி முருகன் என்று சொல்கிறார்கள். சிலர் பூச்சி என்று கூறுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவதில்லை. முருகன் முருகன் என்றுதான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது அன்பு உண்டு. பாசம் உண்டு. உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயரை சூட்டுங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×