என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  பல்லடம்

  பல்லடத்தில் ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் கலந்து கொள்ளவிருந்த தியாகிகள் அலங்கார ஊர்தியை புறக்கணித்ததாக பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டித்து,மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் சார்பில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சாகுல்அமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நகர செயலாளர் ஆறுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

  இதில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி,கணேசன்,நிர்வாகிகள் சதாசிவம்,சாகுல் அமீது மற்றும் ம.ம.க.செயலாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
  Next Story
  ×