search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடியரசு தினவிழா-கோவையில் 2000 போலீஸ் பாதுகாப்பு

    கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) குடியரசு தினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 

    கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதில் கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைப்பார். இதைத்தொடர்ந்து போலீசார், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படை, சாலை பாதுகாப்பு பிரிவு ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொள்வார்.

    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படுவார்கள் அவர்க ளுக்கு நினைவு பரிசு வழங்கப்படும். கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கத்தை கலெக்டர் வழங்குவார்.

    இதேபோன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பள்ளி கல்வித்துறை, மருத்துவ துறை, சித்த மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறைகளில் கொரோனா காலகட்டத் தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகனை மாவட்ட நிர்வாகம்  செய்து வருகிறது. 

    குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிகான ஒத்திகையில் போலீஸ் பயிற்சி மைதானத்தில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று  குடியரசு தினவிழாவில் ஆண்டுதோறும் மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    விழா மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 100 பேர் கோவை வரும் ரெயில்கள், பிளாட்பாரம், பார்சல் சர்விஸ் உள்பட பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். குடியரசு தின விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    குடியரசு தினம் நெருங்கு வதைத் தொடர்ந்து, கோவை டவுன்ஹால் பகுதியில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளன. வழக்கமாக குடியரசு தினத்துக்கு 3 மாதங்களுக்கு முன்னரே தேசியக் கொடி உற்பத்தி , ஆர்டர் களைகட்டி விடும். தயாரிப்புப் பணிகளும் தொடங்கிவிடும்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரன மாக எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    சில நாட்களுக்கு முன்பு தான் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. மேலும் கல்வி நிலையங்கள் முழுமையாக திறக்கப்படாததால் குறைந்த அளவே தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    கொடிகள் குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சம் ரூ.1,500 வரையும், வெல்வெட் துணியினால் ஆன தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகிறது.

    Next Story
    ×