search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.வி.பூமிநாதன்
    X
    எஸ்.வி.பூமிநாதன்

    காலி மதுபாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை- காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு வலியுறுத்தல்

    தற்போது காலி பாட்டில்ஒன்று 30 பைசா முதல் 40 பைசா வரை மட்டுமே திரும்பப் பெறப்படுகின்றன.
    திருப்பூர்:

    காலிமதுபாட்டில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத்தலைவர் எஸ்.வி.பூமிநாதன் தமிழக முதல்வர் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

     தமிழகத்தில் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குபவர்கள் அதனை நண்பர்களோடு அருந்துவதற்காக ஒதுக்குப்புறமானவிளைநிலங்களை தேடிச் சென்று அங்கேயே வைத்து மது அருந்தி காலி பாட்டில்களை விளை நிலங்களுக்குள் தூக்கி எறிகின்றனர்.

    அப்படி தூக்கி எறியப்படும் பாட்டில்கள் உடைந்து விளைநிலங்களை மாசுபடுத்துவதுடன் நிலங்களில் வேலை செய்யும்விவசாயிகளுக்கு காயங்களும் ஏற்படுகின்றன. இதேபோல சாலை ஓரங்கள், வணிக நிறுவனங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் என்று கூட பாராமல் ஆங்காங்கே உடைந்தபாட்டில்களின் துகள்களை நாம் காண முடிகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள். பொதுமக்கள்அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த காலிமது பாட்டில்களை மது பிரியர்கள் ஏன் தூக்கி எறிகின்றனர் என்று பார்த்தால் அந்த காலி பாட்டில்களுக்கு விலை இல்லை என்பதே முக்கிய காரணம்.

     தற்போது காலி பாட்டில்ஒன்று 30 பைசா முதல் 40 பைசா வரை மட்டுமே திரும்பப்பெறப்படுகின்றன. இதே ஒருபாட்டில் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய்க்கு திரும்ப பெறப்படும் என்கிற ஒரு நிலை வந்தால்இது போன்ற விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் காலி பாட்டில்களை தூக்கி எறிவதுமுற்றிலும் தவிர்க்கப்படும்.

    5 ரூபாய் ,10 ரூபாய்க்கு காலி பாட்டில்களை வாங்குவது எப்படிசாத்தியம் என்று பார்ப்போம். தற்போது 30 பைசாவிற்கு வாங்கப்படும் பாட்டில்களைசுத்தம் செய்து 60 பைசாவிற்கு மது பான ஆலைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேகாலி பாட்டில்களை 5 ரூபாய்க்கு வாங்கி அதனை சுத்தம் செய்து 6 ரூபாய்க்கு அல்லது 7ரூபாய்க்கு மதுபான ஆலைகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

    காலி பாட்டில்களின் கூடுதல்விலையை சரிசெய்ய மது பாட்டில்களின் விலையை சற்று உயர்த்தலாம். ஒரு காலி மதுபாட்டில் 5 ரூபாய்க்கு அல்லது 10 ரூபாய்க்கு திரும்ப எடுத்துக் கொள்கின்றனர் என்றால்குடிமகன்கள் யாரும் காலி பாட்டில்களை தூக்கி எறியவோ அதனை உடைக்கவோமாட்டார்கள் .

    இதனால் விவசாய விளைநிலங்கள், சாலைகள் பாதுகாக்கப்படுவதுடன் பூமிமாசுபடுவதை தவிர்க்கலாம். ஆகவே இந்த மனுவினை பரிசீலனை செய்துநடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×