என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அப்துல்ரசாக்.
  X
  அப்துல்ரசாக்.

  முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்ரசாக் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்ரசாக் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார்.
  கடையநல்லூர்:

  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அப்துல்ரசாக் (வயது 78). இவருக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

  அங்கு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அப்துல்ரசாக் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள வடகரை அரபாத் ஜூம்மா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  அப்துல்ரசாக் 1977-1980 வரை கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த  2004-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து  மாநில சிறுபான்மை பிரிவு துணைத் அமைப்பாளராக பதவி வகித்து வந்தார்.

   மறைந்த அப்துல்ரசாக்கிற்கு அகமத்துல் ரகுமான் என்ற மனைவியும், ரஜப் முகம்மது, முகம்மது செரிப் என்ற  மகன்களும் உள்ளனர். இறுதிச் சடங்கில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, ராஜா,  பழனிநாடார், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர் மைதீன் உட்பட தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
  Next Story
  ×