search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பழைய பேருந்து நிலைய மேம்பாலம் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் பழைய பேருந்து நிலைய மேம்பாலம் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம்

    திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மளிகை ,இறைச்சி, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    திருப்பூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி இன்று 3&வது முறையாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
    இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் ஓட்டல்கள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மளிகை,இறைச்சி, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டன. 

    ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பல்வேறு இடங்களில்  ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

    பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்கள் மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெரு பகுதிகளிலும் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொருட்களை கொண்டு செல்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    இன்று முகூர்த்தநாள் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களிடம் போலீசார் விசாரித்து அனுப்பினர்.தேவையற்ற காரணங்களுக்காக வந்த வர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.சிலருக்கு அப ராதம் விதிக்கப்பட்டது. 

    திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.
      திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.


    கடைகள் அடைப்பால்  மாநகர் பகுதியானது வெறிச் சோடி காணப்பட்டதுடன் மிகவும் அமைதியாக காட்சி யளித்தது. இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட  பல்லடம், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், உடுமலைப்பேட்டை, குண்டடம், மூலனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், குன்னத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும்  அனை த்து கடைகளும் அடைக்கப்பட்டன.அந்தந்த பகுதி போலீசார் அப்பகுதி களில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த வார ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் பொது மக்கள் , பயணிகள் கார், ஆட்டோக்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தமிழக அரசு உத்தர விட்டது. இதையடுத்து  இன்று காலை  திருப்பூர் ரெயில்  நிலையத்திற்கு வந்த பயணிகள் கார்களில் முன்பதிவு செய்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்றனர்.  இதேப்போல் திருமணம் உள்ளிட்ட  சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் கார், ஆட்டோக்களில் முன்பதிவு செய்து பயணித்தனர். 

    சில இடங்களில் போலீசார் முன்பதிவு செய்ததற்கான ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். மேலும்   கார், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். 

    Next Story
    ×