என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பயிற்சி வகுப்பு நடந்த காட்சி.
  X
  பயிற்சி வகுப்பு நடந்த காட்சி.

  பாவூர்சத்திரத்தில் பயிற்சி வகுப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு மற்றும் மேலாய்வு குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
  பாவூர்சத்திரம்:

  கலைஞர் வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு மற்றும் மேலாய்வு குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

  குடிசை இல்லா தமிழகம் என்ற நோக்கத்தை எட்டும் வகையில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களின் மறு கணக்கெடுப்பு-2022-ன் கீழ் கணக்கெடுப்பு மற்றும் மேலாண்மை குழுவினருக்கான பயிற்சி வகுப்பு பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. 

  யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். மண்டல அலுவலரும், உதவி திட்ட அலுவலருமான சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். 

  அலுவலக மேலாளர் சுப்பிரமணியன் கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்வது குறித்து பயிற்சியளித்தார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×