search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கிய காட்சி.
    X
    வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கிய காட்சி.

    சேலம் மாவட்டத்தில் 85 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீஸ் கண்காணிப்பு

    முழு ஊரடங்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 85 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
    சேலம்:

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 3-வது முறையாக  ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டும், போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டது.
     
    சேலம் மாநகரில் 32 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு 745 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  புறநகர் பகுதியில் 33 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

    மேட்டூர் பகுதியில் உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஒரு இடம், மாவட்ட எல்லைகளில் 19 இடங்கள் என மொத்தம் 85  இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    மாவட்டத்தில் 3 ஏ.டி.எஸ்.பி., 6 டி.எஸ்.பி., உள்பட, 723 போலீசார், 125 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைக்கு செல்வோர்,  உரிய ஆவணங்களை காட்டியதால் விடுவிக்கப்பட்டனர். 

    வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தும், வழக்குப் பதிவு செய்தும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×