search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார்குளம்.
    X
    அய்யனார்குளம்.

    உடன்குடியில் புதிய குளங்களால் உப்புநீர் நல்ல நீராக மாற்றம்

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அருணாசலபுரம், அய்யனார்குளம், தண்டுபத்தில் உள்ள நரிக்குளம், வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளம் ஆகிய குளங்களில் தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் உப்பு நீர் நல்ல நீராக மாறி உள்ளது.
    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அருணாசல புரம், அய்யனார்குளம், தண்டுபத்தில் உள்ள நரிக்குளம், வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளம் ஆகிய குளங்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆகியன 40 ஆண்டுகளுக்கு பின்பு ஊர்கூடி ஊரணி அமைப்போம் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, குளங்களை நிரப்பினர்.

    தற்போது கடந்த சில நாட்களாக உடன்குடி வட்டார பகுதியில் வெயி லின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இதனால் இந்த குளங்களில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரின் உப்புத்தன்மை குறைந்து,

    நல்ல குளிர்ந்த குடிநீராக மாறி வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் விட்டுமுழுமையாக நிரப்ப வேண்டும் என்று விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×