search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதிஷ்டை விழா நடந்த காட்சி.
    X
    பிரதிஷ்டை விழா நடந்த காட்சி.

    நரசிம்மர் கோவிலில் பிரதிஷ்டை விழா

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் நரசிம்மர் பீடம் அமைந்துள்ளது. இங்கு தென்தமிழகத்தில் முதன் முறையாக விக்ரஹ ரூபமாக ஸ்ரீமகா சூலினி துர்க்கா எழுந்தருளியுள்ளது. இதற்கான பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் ஸ்ரீஸாம் ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடம் அமைந்துள்ளது. இங்கு தென்தமிழகத்தில் முதன் முறையாக விக்ரஹ ரூபமாக ஸ்ரீமகா சூலினி துர்க்கா எழுந்தருளியுள்ளது. 

    இதற்கான பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸாம்ராஜ்யநரசிம்ம பீட நிறுவன தலைவர் மகாதேவன், துணைத்தலைவர் மகேஷ்வரகனபாடிகள், பொரு ளாளர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  

    இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று ஸ்ரீமஹா சூலினி துர்க்கை ஹோமமும், பவுர்ணமி தினத்தன்று சதுர்தசி பூஜையும் நடைபெறுகிறது. 

    மஹா சூலினி துர்க்கையை தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி, சதுர்தசி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மாலை நேரத்தில் (சந்திரன் இருக்கும் நேரத்தில்) வழிபாடு செய்தால் எதிரிதொல்லைகள், சூழ்ச்சிகள், பில்லி, சூனியம், ஏவல் மற்றும் செய்வினை கோளாறுகள் நீங்கும். 

    மேலும் ராகு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஸ்ரீமகா சூலினி துர்க்கையை தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். 

    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து வித நோய்கள் நிவர்த்திக்கும், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் துர்க்கையை வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும் என்பது ஐதகம். 

    எனவே பக்தர்கள் மஹா சூலினி துர்க்கையை வழிபட வருகை தரும்படி ஸ்ரீஸாம்ராஜ்ய நரசிம்மர் பீடத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×