search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியை பாராட்டி பூங்கொத்து கொடுத்த காட்சி.
    X
    மாணவியை பாராட்டி பூங்கொத்து கொடுத்த காட்சி.

    புதியம்புத்தூர் மாணவிக்கு குவியும் பாராட்டு

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த பிளஸ்&-2 மாணவி ஒருவர் தேசிய அளவிலான டிராக் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

     ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த சேசையா மகள் ஸ்ரீமதி, புதியம்புத்தூர் ஜான் தி பாப் டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    டிராக் சைக்கிள் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து வந்தார்.

    இதையடுத்து தேசிய போட்டியில் பங்கேற்க உதவிகள் கேட்டு ஸ்ரீமதி குடும்பத்தினர் கனிமொழி எம்.பி.யை நாடினர். அவரும் ஸ்ரீமதிக்கு ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான சைக்கிள் வாங்க  நிதியுதவி செய்தார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி ராஜஸ்தானில் நடந்த தேசிய டிராக் சைக்கிள் போட்டியில் ஸ்ரீமதி கலந்து கொண்டு குழு பிரிவில் முதலிடம் பெற்று தங் கப்பதக்கமும், தனித்திறன் பிரிவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கமும் வென்றார்.

    இதன் மூலம் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்று புதுடெல்லி சாய் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். தேசிய போட்டியில் வென்ற மாணவி ஸ்ரீமதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் புதியம்புத்தூர் பள்ளி தாளாளர் செந்தூர்மணி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா ஆகியோர் ஸ்ரீமதியை பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

    மேலும் பல்வேறு போட்டிகளில் பங்குபெறும் வகையில் நிதியுதவியும் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வகிதா, ஆசிரியர்கள் வளர்மதி, வில்சன், ஜோதிபாசு, எட்வர்ட், லிவிங்ஸ்டன், தி.மு.க. நிர்வாகிகள் வேல்ராஜ்வின் சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×