என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆலோசனை கூட்டம் நடந்தது.
  X
  ஆலோசனை கூட்டம் நடந்தது.

  கும்பகோணம்-தஞ்சை சாலையை சீரமைக்க வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம்-தஞ்சை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  பாபநாசம்:

  பாபநாசம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சங்கர் தலைமை வகித்து சிறப்புரை யாற்றினார். 

  மாநில இளைஞர் சங்க துணை தலைவர் விஜயராஜன், ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவன், வடுவய்யா, சமூக முன்னேற்ற சங்க 
  முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை 
  வகித்தனர். 

  இந்த கூட்டத்தில், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 
  அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி கிளை கூட்டங்கள் 
  நடத்துவது, மருத்துவர் அன்புமணியின் சாதனைகளையும், 
  பா.ம.க.வின் கொள்கைகளையும் அனைத்து கிராமங்களிலும் 
  திண்ணை பிரசாரம் மேற்கொள்வது, நகை கடன் தள்ளுபடியில் 
  கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் உடன் நிவர்த்தி செய்ய வேண்டும், உண்மையான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், பழுதடைந்த கும்பகோணம்-தஞ்சை, பூம்புகார்-கல்லணை சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இதில் பாபநாசம் உழவர் பேரியக்க ஒன்றிய செயலாளர் சோமு, அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் செல்லத்துரை, பாபநாசம் ஒன்றிய தலைவர் அறிவழகன், பாபநாசம் நகர தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, அமைப்பு செயலாளர் சுந்தரராஜன், ஒன்றிய 
  துணைச் செயலாளர் நீலகண்டன், நகர இளைஞரணி செயலாளர் 
  நரேஷ் குமார், பாபநாசம் முன்னாள் ஒன்றிய செயலாளர் 
  கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×