என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  24 மணி நேர தடுப்பூசி மையம் மாணவர்கள் பயன்பெற வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 4 மாதத்தில், 50 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, 15 ஆயிரம் பேருக்கு கோவேக்ஷின் என 65 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்டு 28-ந்தேதி 24 மணி நேர தடுப்பூசி மையம் உருவாக்கப்பட்டது. 3  ‘ஷிப்ட்’ முறையில் ஒரு டாக்டர், 10 செவிலியர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

  மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில்  முகாமில் 500 முதல் 850 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். 

  அவ்வகையில் கடந்த 4 மாதத்தில், 50 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு, 15 ஆயிரம் பேருக்கு கோவேக்ஷின் என 65 ஆயிரம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

  தொற்று பரவலை தடுக்க தற்போது, 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 - 18 வயதினர் 24 மணி நேர மையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தேவையான ‘கோவேக்ஷின்’ வரவழைக்கப்பட்டு உள்ளது.

  இதுகுறித்து மருத்துவ கல்லூரி அலுவலர்கள் கூறுகையில், ‘ஆதார், பள்ளி முகவரி அல்லது அடையாள அட்டை உள்ளிட்ட செல்லத்தக்க ஆவணங்களை காண்பித்து பெற்றோருடன் வந்து மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

  மாணவர்களுக்கு காலை10 மணி முதல் மாலை 5மணி வரை தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

  உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் 2007ம் ஆண்டுக்கு முன் பிறந்த மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளி செயல்பாட்டின் போது அதிகப்படியான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. 

  தற்போதைய சூழலில் பள்ளிகளில் நேரடி வகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் விடுபட்ட மாணவர்களைக்கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

  உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டு 15,146 மாணவர்கள் உள்ளனர். 

  நேற்றுமுன்தினம் வரை 13,500 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 89 சதவீதமாகும்.விடுபட்ட1,646 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் வகுப்பு ஆசிரியர் வாயிலாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

  இதில் நீண்ட நாட்களாக வராமல் உள்ள மாணவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்தப்படுகிறது. 

  இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×