search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயமடைந்த ராகுல்
    X
    காயமடைந்த ராகுல்

    வீட்டின் சுவர் இடிந்து காயத்துடன் உயிர்தப்பிய சிறுவன்

    திண்டுக்கல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்தததில் சிறுவன் படுகாயமடைந்தான்.
    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பூஞ்சோலை, சத்தியா காலனி, மண்டு கோவில் தெரு, மற்றும் நந்தனார் தெருவில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட பழமை வாய்ந்த காலனி வீடுகள் உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வீடுகளில் இருப்பவர்கள் பெரும் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர்.
     
    கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில், அதிகாரிகளிடம் இந்த வீடுகளை புதுப்பித்து தரச்சொல்லி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான செல்வக்குமார் (34) வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார்.

    அப்போது, இவரது மனைவி பூங்கொடி (30) மகன்கள் ராகுல் (9) முகேஷ் (7) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது எதிர்பாராமல் திடீரென காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ராகுல் என்பவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அவரது தாயார் பூங்கொடியும், தம்பி முகேசுக்கும் சிறு காயம் மட்டும் ஏற்பட்டது. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவன் ராகுல் முதலுதவி சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், இந்த பகுதியில் 60&க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழலில் உள்ளதால் இந்தப்பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும், ஆத்தூரில் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டு பழுதடைந்துள்ள காலனி வீடுகளை புதுப்பித்து கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×