search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பொது வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தமாகும் தொழிற்சங்கங்கள்

    தொழிலாளர் சட்ட திருத்தங்களை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்தி, திருப்பூர் பின்னலாடை துறையை பாதுகாக்க வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் அனைத்து பனியன் தொழிற் சங்க கூட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. எச்.எம்.எஸ்., சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.

    ஏ.ஐ.டி.யு.சி., பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத், எல்.பி.எப்., தலைவர் பாலசுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி., செயலாளர் சிவசாமி, எம்.எல்.எப்., செயலாளர் மனோகர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தொழிலாளர் சட்ட திருத்தங்களை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்தி, திருப்பூர் பின்னலாடை துறையை பாதுகாக்க வேண்டும். 

    பனியன் தொழிலாளருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். 

    அமைப்புசாரா நலவாரியங்களை முடக்க கூடாது. கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெறும். 

    இதில் திருப்பூர் பனியன் தொழிலாளர்களை அதிகளவில் பங்கேற்க  செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×