search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    கோவை -திருப்பதி ரெயிலில் பிப்ரவரி 8-ந் தேதி முதல் 6 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12678) திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் வழியாக பயணித்து இரவு 7:50க்கு பெங்களூரு சென்று சேர்கிறது. 

    இந்த ரெயிலில் நாளுக்கு நாள் முன்பதிவும், கூட்ட நெரிசலும் அதிகரித்து வருவதால் தற்போது 4 முன்பதிவில்லா பொது பெட்டி,இரண்டு சரக்கு பெட்டி என மொத்தம் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டது. இனி மொத்தம் 26 பெட்டிகளுடன் இயங்கும். கோவை -திருப்பதி ரெயிலில் பிப்ரவரி 8-ந் தேதி முதல் 6 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விரைவு  பாசஞ்சர் ரெயில் இயக்கம் சில நாட்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சிக்கு முன்னதாக மலைக்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி நடப்பதால் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரெயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. 

    தினமும் காலை 6.30-க்கு பாலக்காட்டில் புறப்படும் விரைவு பாசஞ்சர் ரெயில் (16844) கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக மதியம் 1.50-க்கு திருச்சி சென்று சேருகிறது.

    மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து மதியம், 2.15க்கு புறப்படும் ரெயில் இரவு  8.25மணிக்கு பாலக்காடு சென்று சேரும். இந்த ரெயில் பயணிக்கும் மலைக்கோட்டை - திருச்சி ரெயில் நிலையம் இடையே சீரமைப்பு மற்றும் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது.

    இதனால் இம்மாதம் 27, 29-ந்தேதி, பிப்ரவரி மாதம் 3, 5 ஆகிய 2 நாட்கள் என மொத்தம் 5 நாட்கள் மலைக்கோட்டை வரை மட்டும் ரெயில் இயக்கப்படும். இத்தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×