search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் இன்று 16.29 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16,29,736 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

    தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 31 லட்சத்து 3,288 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 9.05 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் 25.66 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 89.6 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 66.8 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    2.17 லட்சம் பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33,129 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் சரியான நேரத்தில் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் உடலில் 6 மாதத்திற்கு பின் நோய்எதிர்ப்பு சக்தி குறைவதால் தாமதிக்கக் கூடாது.

    அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு என தெரிவித்தார்.
    Next Story
    ×