search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்ட்ரல் காய்கறி  மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    X
    சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுரை மார்க்கெட்டுகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

    நாளை முழு ஊரடங்கு என்பதால் மதுரை மார்க்கெட்டுகளில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
    மதுரை

    நாளை முழு ஊரடங்கு காரணமாக மதுரையில் இன்று மார்க்கெட்டுகள், இறைச்சி, மீன் கடைகளில் அதிகளவில் மக்கள் திரண்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் 4,854 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 596 பேர் குணமடைந்து வீடு உள்ளது ஆறுதலான விசயம் என்றாலும் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறார்கள்.

    முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

    மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாளை ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மதுரையில் பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்ததுடன் முகக்கவசம் அணியாமல் ஏராளமானோர் நெரிசலில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். 

    முகக்கவசம் அணிவ தன் அவசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் ரூ 500 வரை அபராதம் வசூலிக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தனித்தனி குழுக்கள் அமைக் கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணித்து வருகிறார் கள்.

    கடந்த 7&ந்தேதி முதல் 20&ந்தேதி வரையிலான 2  வாரங்களில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றிய நபர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பொது மக்கள் முகக்கவசம் அணிவதில் பொறுப்பற்ற தன்மையிலேயே இருந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்பரவலை முடிவுக்கு கொண்டுவர சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    இதற்காக காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×