search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகார்
    X
    புகார்

    கொடைக்கானலில் மகளிர் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்

    கல்லூரி மாணவிகள் உள்ள குழுக்களில் பேராசிரியரின் உடற்பயிற்சி புகைப்படம் வைரலாகி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2020 ஆம் ஆண்டு பொது பணியியல் துறை தற்காலிக விரிவுரையாளர் பணியில் சேர்ந்து கடந்த மாதம் வரை பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் மேலாடை இல்லாமல் தான் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை கல்லூரி மாணவிகள் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்ததாகவும், மாணவிகளிடம் விரிவுரையாளர் செந்தில்குமார் அந்த புகைப்படங்களை காண்பித்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவிகள் பெண் பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து கடந்த 5ம் தேதி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை செய்ததில் பேராசிரியர் செந்தில்குமார் வாட்ஸ் அப் குழுக்களில் புகைப்படங்களை பதிவிட்டது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மாணவிகள் படிக்கும் கல்லூரியில் இதுபோன்று புகைப்படங்கள் பதிவிடக்கூடாது என்று செந்தில்குமாரிடம் அறிவுறுத்தப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கல்லூரி முதல்வர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி நிர்வாகம் தன்னை பணி நீக்கம் செய்ததால் கல்லூரியில் உடன் பணிபுரிந்த பெண் பேராசிரியர்கள் தன் மீது அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் தகாத கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் விரைவில் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். கல்லூரி மாணவிகள் உள்ள குழுக்களில் பேராசிரியரின் உடற்பயிற்சி புகைப்படம் வைரலாகி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    செந்தில் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் ஏற்கனவே இருந்த குழுக்களில் தன் மீது எந்த தவறும் இல்லை. தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை திணித்துள்ளனர். நான் நல்ல முறையில் பாடம் கற்பித்து தந்துள்ளேன். எனவே மாணவிகள், கல்லூரி இணைவேந்தர் ஆகியோரது செல்போன் எண்ணிற்கு பேராசிரியர்கள் குறித்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என அறிவுறுத்தி அதனை ஆடியோவாக பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×