search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சண்டிகேஷ்வரர் சிலை.
    X
    சண்டிகேஷ்வரர் சிலை.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மலவர் சன்னதி அருகில் உள்ள சண்டிகேஸ்வரர் சிலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமானது. இதனால் சண்டிகேஸ்வரர் சன்னதி மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சுசீந்திரம் திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பேரில் மீண்டும் சண்டிகேஸ்வரர் சிலையை நிறுவ கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி மயிலாடி மார்த்தாண்டபுரத்தில் சண்டிகேஸ்வரர் சிலை புதிதாக  செய்யப்பட்டது. 2Ð அடி உயரமுள்ள உயர முள்ள சிலை நேற்று காலை தாணுமாலயன் சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மூலவர் சன்னதி அருகில் உள்ள கலச அறையில் சண்டிகேஸ்வரர் சிலை, சுற்றிலும் நெல்மணிகள் கொட்டப்பட்டு அதன் உள்ளே வைக்கப்பட்டது.

    தொடர்ந்து 9 நாட்களுக்கு பிறகு வருகிற 3-ந் தேதி  சண்டிகேஸ்வரர் சன்னதியில் உள்ள சேதமடைந்த சிலையை மாற்றி விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பழைய சிலை அகற்றப்படுகிறது. தொடர்ந்து ஆகம விதிப்படி  பூஜைகள்  செய்யப்பட்டு புதிய சண்டிகேஸ்வரர் சிலை வருகிற 3-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை   திருக்கோவில் கண்காணிப் பாளர் சிவக்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×