என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவெண்ணைநல்லூர்:

  விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள திருவெண்ணைநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகள் சங்கவி (வயது 20).

  இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சங்கவியை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை மாயமாகி விட்டார்.

  இந்த சம்பவம் குறித்து சங்கரநாராயணன் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் சங்கவி எங்கு சென்றார்? என் ஆனார்? அவரை யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பன குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×