என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பறவை
  X
  பறவை

  ராமநாதபுரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடக்கிறது.

  ராமநாதபுரம்


  ராமநாதபுரம் வனத்துறை சார்பில், பறவை  ஆர்வலர்களுடன் இணைந்து வருகிற 24, 25 ஆகிய 2  நாட்கள் கடற்கரை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடக்கிறது. 

  ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச்செல்வனு£ர், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. மேலும் தனுஷ்கோடி, காரங்காடு, வாலிநோக்கம், மணலிதீவு ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பறவைகள் ஏராளமான காணப்படுகின்றன. 

  இந்த ஆண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளதால் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளன. இவற்றை கடற்கரை பகுதிகள், உள்ளூர் நீர்நிலைகள், நிலபரப்புகள் என மூன்று வகைப்படுத்தி கணக்கெடுக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.  

  கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை பின்பற்றி வருகிற  24, 25-ந் தேதி தனுஷ்கோடி, காரங்காடு, வாலிநோக்கம், மணலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
  Next Story
  ×