என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  திண்டிவனத்தில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் நகை பறித்த கொள்ளையன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் நகை பறித்தது தொடர்பாக கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
  திண்டிவனம்:

  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மரக்காணம் சாலை காமராஜர் தெருவை சேர்ந்த சரவணன். அவரது மனைவி சத்யா. இவர் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

  இவர் சம்பவத்தன்று பணிக்கு தனது மொபட்டில் பிரம்மதேசம் போலீஸ் நிலையம் சென்று விட்டு மீண்டும் திண்டிவனம் வந்து கொண்டிருந்தார். மரக்காணம் கூட்டுப்பாதை வளைவில் சென்றுகொண்டிருந்த பொழுது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சத்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

  இதுகுறித்து சத்யா திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வந்தனர்.

  நேற்று திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
  Next Story
  ×