search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
    X
    குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

    குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்

    குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தை தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் குடமுருட்டிஆறு, திருமலைராஜன்ஆறு ஆகிய ஆற்றின் குறுக்கே 
    நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பால பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் கணபதி அக்கரஹாரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் 
    புதிய கால்நடை மருந்தகம் கட்டுவதற்கான இடத்தினையும் ஆய்வு 
    செய்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், கால்நடை பராமரிப்புத்துறை 
    உதவி இயக்குனர் கண்ணன், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, 
    கால்நடை மருத்துவர் வடிவேலன், ஒன்றிய பொறியாளர்கள் 
    சுவாமிநாதன், ஜவஹர், துணை தாசில்தார் செந்தில்குமார், 
    வருவாய் ஆய்வாளர் வரதராஜன் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×