என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கரும்புச்சக்கை தீயில் எரிந்து நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரும்பு சக்கைகள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (58). இவரது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கொட்டகையில் வெல்லம் தயாரிக்கும் பணிக்காக கரும்பு சக்கைகளை போர் போட்டு வைத்திருந்தார். 

  இந்நிலையில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் உள்ள அடுப்பில் இருந்த தீ கரும்பு சக்கரை விழுந்ததில் கரும்பு சக்கைகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. 

  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

  தகவலின்பேரில் நாமக்கல் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தீயை அணைத்து கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கரும்புச்சக்கை தீயில் எரிந்து நாசமாயின.
  Next Story
  ×