என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  தொழில் நஷ்டம்- கோவை வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த சில மாதங்களாக நந்தகுமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.
  கோவை:

  கோவை விளாங்குறிச்சி வெற்றிவேலன் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 38). கட்டிட காண்டிராக்டர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நந்தகுமாருக்கு தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

  இதனால் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று  மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து  வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

  அங்கு அவரை பரி சோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பாளையம்  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குனியமுத்தூர் சுகுணா புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது நாசீம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி செரின் பர்வீன் (40). இவர் பல ஆண்டுகளாக  தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்துக்கு செல்ல வேண்டும் என தனது கணவரிடம் கேட்டு வந்தார்.
   
  இந்தநிலையில் நேற்று செரின் பர்வீனுக்கும் இவரது கணவருக்கும்  இடையேஉணவு சரியில்லை என கூறி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த  செரின் பர்வீன் தனது கணவர் மற்றும் குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றார்.

   அங்கு அவர் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×