என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் டெய்லர் வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகை திருட்டு போனது.
  தஞ்சாவூர்:

  தஞ்சை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது 
  மனைவி தவசித்ரா (வயது 40). 

  இவர் மணிமண்டபம் அருகே டெய்லர் கடை வைத்துள்ளார். 
  தற்போது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். 

  கடந்த 19-ந் தேதி தவசித்ரா வீட்டை பூட்டி விட்டு தனது மகனை அழைத்து கொண்டு திருத்துறைப்பூண்டி அருகே உள்ள களப்பால் கிராமத்துக்கு  சென்றார். 

  இன்று திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை 
  பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதறியடித்து கொண்டு வீட்டுக்குள் சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்தன. 

  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் தங்க நகை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

  இது குறித்து அவர் தஞ்சை மருத்துவகல்லூரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 
  வந்து பார்வையிட்டனர். 

  வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.
  Next Story
  ×