என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோவையில் 749 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
  கோவை:

  தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 

  இந்த தடுப்பூசி முகாம் கடந்த செப்டம்பர் 12-ந் தேதியில் இருந்து தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை கோவை மாவட்டத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கும் மேற்பட்ட 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மொத்தமாக இந்த முகாம்கள் மூலமாக 15.9 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 

  தொடர்ந்து மாவட்டத்தில் இன்று 19&வது மெகா தடுப்பூசி முகாம் ஊரகப்பகுதிகளில் 537 மையங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 212 மையங்கள் என மொத்தம் 749 மையங்களில் இன்று நடந்தது. 

  இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் ஆகியோருக்கு மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

  தற்போது 3-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  
  Next Story
  ×