என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  வல்லம்:

  தஞ்சை அருகே வல்லம் வடக்குச் செட்டித் தெருவை சேர்ந்தவர் 
  வினோத் (வயது 32) விவசாயி. சம்பவத்தன்று இவரது வீட்டு 
  காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்த 4 பேர் பிளேடால் கதவு 
  தாழ்ப்பாளை அறுக்க முயற்சி செய்தனர். 

  சத்தம் கேட்டு வினோத் வந்ததால் அந்த 4 பேரும் தப்பியோடி விட்டனர்.

  இதுகுறித்து வினோத் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் 
  சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து 
  விசாரணை மேற்கொண்டார். 

  விசாரணையில் வீட்டில் திருட முயன்ற முன்னையம்பட்டியை சேர்ந்த 
  கார்த்தி (20) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

  மேலும் தப்பியோடிய 13 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×