search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    X
    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    கும்பகோணத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை தமிழக அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் திருலோகி 
    ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 

    இந்த முகாமை அரசு தலைமைக் கொறடா கோவி செழியன் தொடக்கி வைத்து சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை, 
    ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கந்தசாமி, 
    கால்நடை மருத்துவர்கள் ஸ்ரீதேவி, உதயசந்தர், புகழேந்தி, கால்நடை ஆய்வாளர்கள் ஜெகதீஷ், நாகவள்ளி, கால்நடை பராமரிப்பு 
    உதவியாளர்கள் மதிவாணன், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் 
    கால்நடை மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

    சிறப்பு முகாமில் குடற்புழு நீக்கம், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி 
    போடுதல், செயற்கை முறையில் கருவூட்டல், சினைப் பரிசோதனை, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல்.

     மலட்டு நீக்கம் சிகிச்சை, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் 
    தடுப்பூசி தீவனப் பயிர் மற்றும் தீவனப் புல் சாகுபடி விளக்கம் 
    சிறு அறுவை சிகிச்சை சிறு கண்காட்சி மண்டல ஆராய்ச்சி 
    மையத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்துகொண்டு 
    தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்கள்.
     
    இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.
    Next Story
    ×