என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கமலாலயக் குளம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு.
  X
  கமலாலயக் குளம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு.

  கமலாலய குளம் தடுப்புசுவர் கட்டுமான பணி-கலெக்டர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் தியாகராஜ சுவாமி கமலாலய குளம் தடுப்புசுவர் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  திருவாரூர்:

  திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலுக்கு உட்பட்ட கமலாலய குளத்தின் தென்கரை பகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புசுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

  இப்பணிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பார்வையிட்டு 
  ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

  திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குட்பட்ட கமலாலயம் திருக்குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 
  790 அடியும் அளவுகள் கொண்ட பெரிய தெப்பக்குளமாக உள்ளது. 

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி பொழிந்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையின் மதில்சுவரின் ஒருபகுதி 101 அடி 
  சரிந்து விழுந்தது. 

  இதனை தொடர்ந்து, மேலும் 47 அடிசுவர் சேதமடைந்தது. தொடர்நது 
  தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் 
  148 அடிசுவர் மீண்டும் அமைத்திட பணிகள் தொடங்கப்பட்டு 
  நடைபெற்று வருகின்றது. 

  இன்றையதினம் கட்டுமான பணிகள் மற்றும் அவற்றின் தரங்களை 
  ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  இவ்வாறு அவர் கூறினார். 

  இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், நகராட்சிஆணையர் பிரபாகரன், தி.மு.க நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
  Next Story
  ×