என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காட்டூரில் கருணாநிதி தாயார் நினைவிடத்தில் தாட்கோ தலைவர் மதிவாணன் மாலை அணிவித்தார்.
  X
  காட்டூரில் கருணாநிதி தாயார் நினைவிடத்தில் தாட்கோ தலைவர் மதிவாணன் மாலை அணிவித்தார்.

  தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனில் அக்கறை கொண்டுள்ளது - தாட்கோ தலைவர் மதிவாணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்று தாட்கோ தலைவர் மதிவாணன் கூறினார்.
  திருவாரூர்:

  திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் தாட்கோ தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் 
  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

  மேலும் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் படத்திற்கும் மாலை அணிவித்தார்.

  அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  தமிழக முதல்வர் எனக்கு தாட்கோ தலைவர் பதவியை வழங்கி இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலனுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 

  தமிழக அரசு ஆதிதிராவிடர்நலனில் அக்கறை கொண்டுள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஆதிதிராவிட மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைத்து நலன்களையும் அடைய 
  வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

  முன்னதாக திருவாரூர் பயணியர் விடுதிக்கு வந்த தாட்கோ தலைவர் உ.மதிவாணனை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
  Next Story
  ×