என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காய்கறி
  X
  காய்கறி

  மாட்டுத்தாவணி நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்டுத்தாவணி நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? என்று வியாபாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
  மதுரை

  மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் கழிப் பறைகள் பராமரிப்பு இன்றி தண்ணீர் வசதி இன்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. 

  இந்த மார்க்கெட்டுக்கு பல்வேறு  நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகள் திறந்த வெளியையே கழிப்பறையாக பயன்படுத் தும் அவல நிலை உள்ளது.

  காய்கறி மார்க்கெட் வளாகத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக வியாபாரிகள் நடந்து செல்லவும், வாக னங்கள் வந்து செல்லவும் தகுதியற்ற மோசமான நிலையில் உள்ளது. மார்க் கெட்டில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகளுக்கு பாதுகாப் பில்லை. மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிவதுடன் காய்கறிகளை தின்று விடுகின்றன.

  இங்குள்ள கழிப்பறை களுக்கு போதுமான தண்ணீர் வசதி கிடையாது.  குடிநீர் வசதியும் கிடையாது. 

  காய்கறி மார்க்கெட்டின் மேற்கூரையும்,  சுவரும் சரிந்து இடிந்து விழும் நிலையிலும், மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியின்றி கடைகளுக்குள் புகுந்து காய்கறிகளை நாசமடைய செய்துவிடுகிறது. இங்குள்ள மின் கம்பங்களும், போதிய பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது. மின் கம்பங்கள் எப்போது முறிந்து விழும் என்ற அபாய நிலையில் உள்ளது. மின் விளக்குகள் பல எரியாததால் பெரும் பான்மையான பகுதிகள் இருள்சூழ்ந்து  காணப் படுகிறது.

  இங்கு சேரும் குப்பைகள் உடனுக்குடன் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் அவல நிலையும் உள்ளது. எனவே 2010-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு, இடம் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலும் செயல்படுத்தப்படாத நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சின்னமாயன், செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது அப்போது மத்திய அமைச்சராக இந்த மு.க.அழகிரியின் முயற்சியால் மாட்டுத் தாவணி பஸ் நிலையம் அருகே 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 85  கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்ட அறிக்கையும், அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அரசியல் காரணங்களால் நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டம் 11 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  எனவே திட்டம் அறிவிக்கப்பட்டு அரசாரணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு தென்மாவட்ட மக்களின் அத்தியாவசியமான வாழ்வா தாரமான நிரந்தர காய்கறி மார்க்கெட் அமைக்கும் திட்டத்தை தற்போதைய அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

  இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி  அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர், அப்போதைய மேயர், மத்திய-மாநில அமைச்சர்களிடமும், முன் னாள் முதல்வர், துணை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடமும், தற்போதைய முதல்வரிடமும் நேரில் முறையிட்டும் இத்திட்டத்திற்கு உயிர் கொடுக்க யாரும முன்வரவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  எனவே தி.மு.க. ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த நிரந்தர காய்கறி  மார்க்கெட் திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்பதை வியாபாரிகளின் கோரிக்கை யாக உள்ளது.
  Next Story
  ×