என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பலியான பெருமாள்.
  X
  பலியான பெருமாள்.

  வாசுதேவநல்லூரில் மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்து-வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாசுதேவநல்லூர் மேலப்புதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் பலியானார்.
  சிவகிரி:

  வாசுதேவநல்லூர் மேலப்புதூர் வடக்கு தெரு 1&வது சந்தில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 28).  இவரும் இவரது நண்பர் குமார் என்பவரும் நேற்று தேவிபட்டணத்தில் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள்.
   
  இரவு 9 மணியளவில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் ஊருக்கு வடக்கே ஒத்தக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பெருமாள் உயிரிழந்தார். 

  குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  குமார் முதலுதவி சிகிச்சை எடுத்த பின்னர் சென்றுவிட்டார்.  போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×