என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்.
  X
  ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்.

  தி.மு.க.வினர் திடீர் மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் உமராபாத்தில் தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
  ஆம்பூர்:

  ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் உட்பட திமுக நிர்வாகிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆபாசமாக எழுத முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து ஆடியோ வெளியிட்டார்.

  இது சம்பந்தமாக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆம்பூர் பேர்ணம்பட்டு சாலையில் 2 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  அவரை கைது செய்யும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி சாலையில் அமர்ந்து சாலை மறியல் 100&க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உமராபாத் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

  அதன்பின்னர் எம்.எல்.ஏ.வை தரக்குறைவாக பேசியவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
  Next Story
  ×